மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அமெரிக்காவில் பஷில் சுகபோகம் : நவீன் திஸா­நா­யக

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை வீட்­டுக்கு அனுப்பி வைத்து விட்டு சுதந்­திர கட்­சி­யி­ன­ரையும் நாட்டு மக்­க­ளையும் நடுத்­தெ­ருவில் நிர்க்­க­தி­யாக்கி விட்டு அமெ­ரிக்­கா­வுக்கு தப்­பி­யோடி சுக­போகம் அனு­ப­விக்­கின்றார் பஷில் ராஜ­பக்ஷ என அமைச்சர் நவீன் திஸா­நா­யக நேற்று சபையில் தெரி­வித்தார். கிரிக்கெட் உலகக் கிண்­ணத்தை இலங்கை அணி வெல்­லு­மானால் 130 மில்­லியன் ரூபாவை வழங்க அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்கியுள்­ள­தா­கவும் அமைச்சர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இடைக்­கால வரவு செலவு திட்டம் மீதான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே சுற்­று­லாத்­துறை மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

மஹிந்த ராஜ­பக்ஷ சிறந்த அர­சி­யல்­வாதி திற­மை­யா­னவர். பல­சாலி அதனை நாம் ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும். உண்­மையை மூடி மறைக்க மாட்டேன்.ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி தோல்வி கண்டு வீட்­டுக்கு போக முக்­கிய காரணம் பஷில் ராஜ­பக்ஷ ஆவார்.பஷில் ராஜ­பக்ஷ எனது தந்­தையின் நல்ல நண்பர்.

ஆனால் கடந்த ஆட்­சியில் அவர் எவ்­வாறு நடந்து கொண்டார். மக்கள் பிரதி நிதி­களை மக்­க­ளுக்கு சேவை செய்ய விடாது தடுத்தார். அடக்கு முறையை மேற்­கொண்டார் என்­பதை சுதந்­திரக் கட்­சி­யி­ன­ரான நீங்கள் நன்கு அறி­வீர்கள்.

ஜனா­தி­பதி மஹிந்­தவின் தோல்­விக்கு முதன்­மை­யா­னவர் பஷில் ராஜ­ப­க்ஷ­.இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னரை நடுத்­தெ­ருவில் கைவிட்டு மக்­க­ளையும் நடுத்­தெ­ருவில் கைவிட்டு அமெ­ரிக்­கா­வுக்கு தப்­பிச்­சென்று சுக­போ­க­மாக வாழ்க்கை நடத்­து­கின்றார்.

கடந்த ஆட்­சி­யா­ளர்கள் தமிழ் பேசும் மக்­களை ஓரம் கட்­டி­னார்கள். அவர்­களை மதிக்­க­வில்லை. சிங்­கள மக்­களின் வாக்­குகள் மட்­டுமே போதும் நாம் வென்று விடுவோம் என்ற மம­தையில் செயற்­பட்­டுள்ளார்.

எனவே, தமிழ் பேசும் மக்கள் மஹிந்­தவை நிரா­க­ரித்­தனர். மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அமோக ஆத­ரவை வழங்கி வெற்றி பெறச்­செய்­தனர்.இது கடந்த கால ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நல்ல பாட­மாகும்.

எதிர்­வரும் உல­கக்­கிண்ணக் கிரிக்கட் போட்­டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் 130 மில்­லியன் ரூபாவை சன்­மா­ன­மாக வழங்க அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது.

கடந்த ஜனா­திபதித் தேர்­தலில் அனைத்து இன, மத மக்கள் மத்தியிலும் மைத்திரிபால சிறிசேன தனது கொள்கைகளை பிரசாரம் செய்தார்.ஆனால் மஹிந்த ராஜபக்ஷ இனவாத த்தை கையிலெடுத்தார் என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply