மெக்சிகோவில் கொன்று வீசப்பட்ட 60 பேர் உடல் சுடுகாட்டில் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்கா நாடான மெக்சிகோவில் அகாபுல்கோ நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு தனியார் சுடுகாடு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மூடப்பட்டு வேறு இடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்து பிணவாடை வீசுவதாக அண்டை வீடுகளில் குடியிருந்தவர்கள் புகார் செய்தனர். உடனே அங்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு மிகவும் அழுகிய நிலையில் 60 உடல்கள் கிடந்தன. அவற்றில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர். அந்த பிணங்கள் அழுக்கு துணியால் சுற்றி கட்டப்பட்டு இருந்தது.இந்த உடல்கள் எப்படி இங்கு வந்தது என போலீசார் விசாரணை நடத்தினார்கள். கடந்த 2 ஆண்டுகளில் பிணத்தை எரிக்க இந்த சுடுகாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்–யார்? என்று கணக்கெடுத்தனர்.

பிணங்களை எரிக்க உரியவர்கள் இங்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் எந்திரம் சரிவர இயங்காததால் அது மூடப்பட்டு விட்டது. எனவே பிணங்களை அப்படியே போட்டு விட்டு சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இது சுடுகாடு குயரெரோ மாகாணத்தில் உள்ளது. இது 43 மாணவர்கள் மாயமான இகுயாலா நகருக்கு அருகே உள்ளது. அதனால்தான் அப்பகுதியில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply