தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை; புதிய ‘ஜனாதிபதி செயலணி” ஆராயும் அமைச்சர் ராஜித அறிவிப்பு
நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அவற்றுக்கிடையே இருக்கும் பிரச்சினை களைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடித் தீர்வுகளை பரிந்துரை செய்ய நல்லிணக்கத்துக்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இந்த விசேட ஜனாதிபதி செயலணியானது தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கடந்த கால மோதல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைக் குறைப் பது தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை செய்யவுள்ளது.
மேலும் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது குறித்த சகல விடயங்களையும் ஆராய்ந்து ஆய்வு செய்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு சமர்ப்பித்த இந்த அமைச்சர வைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்ச ருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இந்த விசேட ஜனாதிபதி செயலணியானது நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply