இலங்கை இராணுவத்தின் வெளிநாட்டுப் பயிற்சி பற்றி அமைச்சர் கவனம்
இலங்கை இராணுவத்தினர் வெளிநாட்டு பயிற்சிகளை பெறுவதில் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நீக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புதிய பாதுகாப்பு (இராஜாங்க) அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தற்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்று பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.
திருகோணமலையிலுள்ள 22வது இராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் முப்படையினர் மத்தியில் உரையாற்றிய ருவான் விஜேவர்தன, உள்நாட்டில் தற்போதுள்ள பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க தான் தயார் இல்லை என்றார்.
மேற்குலக நாடுகளுடன் கட்டியெழுப்பப்படும் இராஜதந்திர உறவுகளைக் கொண்டு எதிர்காலத்தில் இலங்கை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஐநா அமைதிகாக்கும் படையில் கூடுதல் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.
சில நாடுகளில் இலங்கை பாதுகாப்பு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிக்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அந்தப் பிரச்சனைகளை நீக்கத்தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் பாதுகாப்புதுறை அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி உள்ளுர் செய்தியாளர்கள் கேட்டபோது, அது தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சர் மறுத்து விட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply