துப்பாக்கி முனையில் எதையும் சாதிக்க முடியாது: ரஷியாவுக்கு ஒபாமா எச்சரிக்கை

உக்ரைன் நாட்டில் அரசுக்கு எதிராக ரஷியா ஆதரவாளர்கள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ரஷியா ராணுவ உதவிகள் செய்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்நாட்டு போர் மோசமான நிலையை எட்டியுள்ளது. ரஷியாவுக்கு ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதே நேரத்தில் இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணவும் முயற்சி நடந்து வருகிறது. இதற்காக ஜெர்மனி அதிபர் மார்கல் சமாதான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் நேற்று அமெரிக்கா சென்று அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஒபாமா கூறியதாவது:–

உக்ரைன் பிரச்சினையில் சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் ஆகும். ஆனால் ரஷியா துப்பாக்கி முனையில் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என நினைக்கிறது. ஒரு போதும் துப்பாக்கி முனையில் எதையும் சாதிக்க முடியாது. ரஷியா ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளில் மாற்றி அமைத்து விடலாம் என முயற்சிக்கிறது.

இதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இப்போது கூட ரஷியாவுடன் மோதல் போக்கை யாரும் விரும்பவில்லை. அமைதியான முறையில் பேசி தீர்க்க வேண்டும் என்றே நினைக்கிறோம். அதற்கான ஒத்துழைப்பை ரஷியா வழங்க வேண்டும்.

ரஷியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதுவரை நினைக்கவில்லை. அதே நேரத்தில் ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ரஷியா அதிபர் புதின் கூறும்போது, உக்ரைன் எங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதை நாங்கள் ஒதுபோதும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply