இன்றைய கிழக்கு மாகாண சபை அமர்வில் அமலிதுமளி

கிழக்கு மாகாண சபை அமர்வு சபையின் தவிசாளர் ஆரியபதி பலபதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன. இந்த அமர்வின்போது புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களினதும் அத்துடன் முதமைச்சின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்து முடிந்ததும் அனைத்து கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கு சபையில் உரையாற்ற சுமார் 5 நிமிடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன.

இதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் குழுத் தலைவர் தன்டாயுதபானி உரை நிகழ்த்துகையில், உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் 3 மில்லியனை 4 மில்லியனாக வழங்கி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை புதிய முதலமைச்சரிடம் முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சியின் குழுத் தலைவர் தயா கமகே உரையாறுகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமையும், கட்சியையும் பற்றி மிக அவதூறாக பேசும்போது அவரின் உரையை கண்டித்து பேச விடாமல் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், தவம், லாஹீர், மன்சூர், அன்வர் ஆகியோர்களுடன் முதலமைச்சரும் இணைந்து அவரின் உரையை கண்டித்தபோது சபையில் பெரும் அமலிதுமளி ஏற்பட்டன.

இச்சபையின் நடவடிக்கைகள் யாவும் தவிசாளரினால் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply