ஐ எஸ் பிடியிலிருந்த அமெரிக்கப் பெண்மணி கொலை
சிரியாவில் இஸ்லாமிய அரசு தீவிரவாதக்குழுவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண்மணி கைலா ஜீன் முல்லர் கொல்லப்பட்டுள்ளதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதிசெய்திருக்கிறார்.அவர் கடந்த 18 மாதங்களாக அந்தத் தீவிரவாதக் குழுவால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். அந்த இருபத்தி ஆறு வயதான தொண்டு நிறுவன ஊழியரது கொலைக்கு காரணமானவர்களை அமெரிக்கா நீதியின் முன் நிறுத்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.இவர் ஜோர்டானின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்லாமிய அரசு அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
ஆனால் அதை உறுதிப்படுத்துவதற்கான சாட்சியங்களை தாங்கள் காணவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துவந்தனர்.
தமது மகளின் மரணம் தொடர்பில் தாங்கல் நொறுங்கிவிட்டதாக தெரிவித்திருக்கும் முல்லரின் பெற்றோர், தமது மகள் உதவி தேவைப்படுபவர்களின் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
அவரது மரணம் எப்படி அல்லது எப்போது இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply