13வது திருத்தம்: இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும்!
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமையவும் சம்பந்தன் இதன்போது தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன நாளை (15) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த நான்கு நாள் விஜயத்தின் போது அந் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய நபர்களை அவர் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளும் முதலாவது வௌிநாட்டு விஜயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply