தமிழ் நாட்டு இலங்கை அகதிகள் பா. செழியன். காந்தியம்
தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இங்கு அனுப்புவது பற்றி செய்திகள் அடிக்கடி பார்க்க முடிகிறது. 2005 ல் இடம்பெயர்ந்து இடைத் தங்கு முகாமில் உள்ள 5000 திற்கு மேற்பட்ட சம்பூர் மக்களை மீண்டும் அவர்களின் இடங்களுக்கு திருப்பி அனுப்புவது பற்றி ஆக்க பூர்வமான அக்கறையை முதலில் எல்லா தரப்பினரும் காட்டுவது தான் சிறப்பானது. இதில் தமிழ் அரசுக் கட்சித் தலைவர்கள் வடக்குக்கு ஒரு நிலை பாடு கிழக்குக்கு ஒரு நிலைபாடு என பாரபட்சம் காட்டக் கூடாது. கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் விரைந்து செயல் ஆற்ற வேண்டும் இவ்விடயத்தில். ஜனாதிபதியின் 100 நாட்கள் திட்டத்தில் இதை விரைவாக ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
உள் நாட்டில் இடம் பெயர்ந்து அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழும் உள்ளூர் அகதிகள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வாழ முதலில் வசதி செய்து கொடுங்கள், வேலை வாய்ப்பு, பாடசாலை, மருத்துவ வசதிகள் செய்து கொடுங்கள். உள் கட்டுமானங்களை உறுதியாக கட்டியெழுப்புங்கள் முதலில். இந்தியாவில் உள்ள அகதிகளை இங்கு எடுபதற்கு எந்த முக்கியத்துவமும் தற்போது கொடுக்கத் தேவை இல்லை.
2009 மே யில் இங்கு வன்னியில் இடம் பெயர்ந்து மீண்டும் குடியமர்தப்படவர்களின் வசதிகள் இன்னும் சரிவர செய்யப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் மட்டும் 25000 விதைவைகளும் அவர்களின் குழந்தைகளும் பொருளாதார வசதிகள் இன்றி மிக வறிய நிலையில் வாழ்கை நடத்தி வருகிறார்கள். தமிழ் நாட்டில் நிம்மதியாக வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளை அவசரமாக இங்கு எடுக்கும் அக்கறையை தயவு செய்து இங்குள்ள மக்களின் அவலங்கள் மீது காட்டுங்கள். இந்திய அரசு வன்னியில் இடம்பெயந்தர்வர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்து உதவி செய்கிறார்கள். சம்பூர், கன்னியா, பன்குளம் மக்களுக்கும் இந்தியா உதவி செய்திருக்கும் கிழக்கு மாகாண தமிழ் பிரதி நிதிகள் அக்கறை காட்டியிருந்தால். இப்பொழுதும் அவர்கள் இதை செய்யலாம். கட்சி வேறு பாடு இன்றி சம்பூர் மக்களின்மீள் குடியற்றம் பற்றியும் கிழக்கு மாகாணத்தில் உள்ள விதவைகளின் குடும்பங்களுக்கு நிரந்தர பொருளாதார வசதிகள் ஏற்பதிக் கொடுப்பது பற்றியும் ஜனாதிபதியுடன் தனித் தனி கட்சிகளாக (ஒன்றாக சேர்ந்து செயல் பட சந்தர்பம் இல்லாதபடியால்) பேச்சு நடத்த முடியும்.
கிழக்கு மாகாண முதல் அமைச்சர்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதல் அமைச்சர் தொடர்ச்சியாக இல்லாமல் போவது அங்குள்ள தமிழர்களின் நல்ன்களுக்கு நல்லது அல்ல. தங்களின் நிலத்தை காப்பாற்ற அந்த மாகாண மக்கள் கொடுத்த விலை எப்போதும் ஈடு செய்ய முடியாத ஒன்று.
அந்த மாகாண தமிழ் மக்களின் நலன்களை காப்பற்ற வேண்டிய தமிழ்ப் பிரதி நிதிகள் விரைந்து செயல் ஆற்ற வேண்டியுள்ளது. இதில் எந்த இனவாதமும் இருக்கக் கூடாது. யார் மீதும் நாங்கள் குரோதம் கொள்ளத் தேவையில்லை எங்கள் நலன்களைக் காப்பாற்ற. கிழக்கு மாகாணத் தமிழர்களின் நலன்களை அங்குள்ள தமிழ் பிரதிநிதிகளே சரியாக புரிந்து கொண்டு நடக்க வில்லை. அப்படி ஒரு உண்மை நிலைமை இருக்கும் பொழுது, எப்படி தமிழர் என்று கூறிக்கொள்ள வெட்கப் படும் தமிழ் பேசும் பிரதி நிதிகள் விளங்கிக் கொள்வார்கள்?
தற்போதைய முதல் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று கொண்டு வந்து செயல்த் திறம் மிக்க தமிழ் முதல் அமைச்சர் ஒருவரை எல்லா தமிழ் மாகாண சபை உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும். ஒன்றாக சேர்ந்து செயல்ப்பட சாத்தியம் இல்லை என்று விட்டு விடாதீர்கள். வேற்றுமையிலும் ஒன்றாக செயல் படலாம் தமிழ் மக்களின் நலன்களில் நன்மைகளில் அன்பிருந்தால், அக்கறையிருந்தால், அந்த மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்று நினைத்தால். இது ஒரு இனத்தின் அதிகார வெறியின் அம்சமாக இச்செயல் அமையக் கூடாது. கிழக்கு மாகாணத் அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து தலை நிமிர்ந்து வாழ வழி செய்யும் ஒரு செயலாக தயவு செய்து செய்யவும். அந்த தமிழர்கள் தங்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் உங்களுக்கு வாக்குகள் அளிப்பதில் ஒற்றுமை காட்டி உங்களுக்கு முன் மாதிரி காட்டியவர்கள். தங்கள் நலன்களை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நம்பியவர்கள். அதற்கு நீங்கள் ஆக்கபூர்வமாக எதையாவது செய்யுங்கள்.
உங்களுக்குள் ஒற்றுமை வராது என்று கூறிவிட்டு பேசாமல் இருந்து விடாதீர்கள். ஒற்றுமை இல்லாமலே ஒரே குறிக் கோள்களுடன் எப்படி செயல் ஆற்ற முடியும் என்று சிந்தித்து கிழக்கு மாகாணத் அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்றுங்கள். கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்து அகதிகளாக வாழுபவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி கௌரவமாக வாழ அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாகாண சபையில் தீர்மானம் கொண்டு வந்திருந்தால் எவ்வளவு நல்ல முயற்சியாக இருந்திருக்கும். 25000 விதவைக் குடும்பங்களுக்கு நிரந்தர வாழ்வாதார வசதிகள் செய்து கொடுங்கள் என்று அரசைக் கேட்டு பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கலாம். இதெல்லாம் தமிழர் என்று கூற வெட்கப் படுபவர்கள் ஆட்சில் இருந்தால் நடப்பது சாத்தியம் இல்லை. யுத்தத்தில் 100 வீதம் பாதிக்கபட்ட இனம் தான் ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டும். அந்த இனம் அங்கு ஏனைய இனத்தவர்களுக்கு சரி சமமாக தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அந்த இனத்தின் ஒவ்வொரு தாயும் ஆணந்தக் கண்ணீர் சிந்த வேண்டும். இந்த முயற்சியில் இனவாதமோ மத வாதமோ இருக்கக் கூடாது.
பா. செழியன். காந்தியம்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply