ரெயில் மோதி இரண்டாக உடைந்த பயணிகள் பேருந்து: 16 பேர் பலி
மெக்சிகோவின் நுவோ லியான் மாநிலத்தில் உள்ள அனாகுவாக் நகரில் பயணிகள் பேருந்து மீது சரக்கு ரெயில் மோதியதில் பேருந்து இரண்டு துண்டாக உடைந்தது. இந்த கோர விபத்தில் 16 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயமடைந்தனர்.இது குறித்து அவசர சேவைகள் தலைவர் ஜார்ஜ் கமாச்சோ கூறுகையில், “சிக்னலை மதிக்காமல் பேருந்து ரெயில்வே கிராஸிங்கை கடந்ததால் விபத்தில் சிக்கி இரண்டு துண்டானது“ என்றார்.
இந்த விபத்தில் 16 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பேருந்துக்கு அடியில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை 20 வரை உயரும் என்றும் அவர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
40 இருக்கைகளே கொண்ட அந்த பேருந்தில் 60 பேர் பயணித்ததாக உள்ளூர் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply