இந்தியாவுக்கு பயணமானார் ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதலாவது  வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இன்று ஞாயிறுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு  இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். யுஎல்195 என்ற விமானத்தில் 10 பிரதிநிதிகளுடன் புது டில்லிக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வார்.

இந்தியப் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து விஷேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் அம் மாகாணங்களில் சிவில் நிர்வாகத்தை உறுதி செய்வது போன்ற விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பெருந்தோட்ட துறையில் இந்திய நிதியுதவியுடன் 20,000 வீடுகளை தீர்மானிப்பது தொடர்பான ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்களும் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக செய்திப்பிரிவு நேற்று தெரிவித்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை புத்தகயாவுக்கு சென்று வழிபடுவர். புதன்கிழமை காலை இக்குழுவினர் திருப்பதி சென்று வழிபடுவர். அன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்புவார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply