அவலோக்தேஸ்வர போதிசத்வ சிலையை மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தாணிகர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவலோக்தேஸ்வர போதிசத்வ சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் திரை நீக்கம் செய்து வைத்தார்.கி.மு 08ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போதிசத்வ சிலை அனுராதபுர வேரகல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.
தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலச் சிலையான இதன் பாதங்கள் லலிதாசன மற்றும் ராஜலீலாசன வடிவத்தில் அமைந்துள்ளன.
மத்திய கலாசார நிதியத்தின் பட்டலிய சிலை அமைக்கும் பாடசாலை உருவாக்கியுள்ள இந்த போதிசத்வ சிலையின் மாதிரி இவ்வாறு இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தாணிகர் அலுவலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply