லிபியாவில் 21 கிறிஸ்தவ பிணைக்கைதிகள் தலை துண்டித்து படுகொலை: ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெறிச்செயல்

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்போது லிபியாவிலும் பல பகுதிகளை கைப்பற்றி அங்கும் காலூன்றி உள்ளனர். இவர்கள் தங்களுக்கு எதிராக செயல்படும் நாடுகளை சேர்ந்த வர்களை பிணைக் கைதிகளாக பிடித்து சென்று தலை துண்டித்து படுகொலை செய்கின்றனர். இதற்கு முன்பு அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த பிணைக் கைதிகளை தலை துண்டித்து கொன்றனர். தற்போது எகிப்தை சேர்ந்த 21 கிறிஸ்தவர்களை அதே பாணியில் கொலை செய்துள்ளனர்.

அண்டை நாடான லிபியாவில் எகிப்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு சிர்தே நகரில் தங்கியிருந்த ஏராளமான கிறிஸ்தவர்களை கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடத்தி சென்று பிணைக் கைதிகளாக சிறை பிடித்தனர்.

அவர்களை ஈவு இரக்கமின்றி தலைகளை துண்டித்து படுகொலை செய்தனர். அதுவும் ஒரே நேரத்தில் இவர்களை கொன்றனர்.

இது குறித்த புதிய வீடியோவை அவர்களது தபிப் ஆன்லைனில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதில், வழக்கம் போன்று பிணைக் கைதிகள் ஆரஞ்ச் நிற உடை அணிந்திருந்தனர். அவர்கள் கடற்கரையில் நடத்தி அழைத்து செல்லப்படுகின்றனர்.

கைவிலங்கிடப்பட்ட அவர்கள் அனைவரையும் முழங்காலிட வைக்கின்றனர். கருப்பு நிறத்தில் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் அவர்களது தலைகளை கத்தியால் துண்டிக்கின்றனர். இந்த வீடியோ காட்சி 5 நிமிடங்கள் ஓடியது. கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

லிபியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது எகிப்து குண்டு வீசி தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு நாடுகள் எகிப்தில் தளங்கள் அமைத்து குண்டு வீச்சு நடத்தின.

மேலும் அல்கொய்தா தீவிரவாதிகள் தலைவர் பின்லேடனை கொன்று அவரது உடலை கடலில் அமெரிக்கா புதைத்தது. எங்கு அவர் புதைக்கப்பட்டார் என்று வெளி உலகுக்கு அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

இது போன்ற காரணகளுக்கு பழிவாங்க ஐ.எஸ். தீவிரவாதிகள் கிறிஸ்தவ பிணைக் கைதிகளின் தலைகளை துண்டித்ததாக தெரிகிறது. மேலும் எகிப்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார்களின் மனைவிகள் கமிலா ஷெஹாடா, வாபா கர்னஸ்டன்டின் ஆகியோர் இஸ்லாம் மதத்துக்கு மாற விரும்பினர். அதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு பழிவாங்கவும் இந்த நடவடிக்கை மேற் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே கிறிஸ்தவர்கள் படுகொலைக்கு எகிப்து அதிபர் அபல்தெல் பாத் அல் – சிசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த காட்டு மிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட கொலைகாரர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply