பாகிஸ்தானின் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது: கே.ஜே. சிங் பேச்சு
இந்தியா தனது அண்டை நாடான பாகிஸ்தானிடம் இருந்து வரும் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முழுமையான அளவில் தயாராக உள்ளது என்று மூத்த ராணுவ அதிகாரி இன்று கூறியுள்ளார். இது குறித்து மேற்கு பிரிவு லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே. சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், அணு ஆயுதங்களை இருவரும் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) கொண்டிருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் பாகிஸ்தானை விட இந்தியா சிறப்பான முறையில் இருக்கிறது. தனது படைகளை பொறுத்த அளவில், தொழில் நுட்ப பகுதி மற்றும் பயிற்சி பகுதி ஆகியவற்றில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது என கூறியுள்ளார்.
அவர், கடந்த 1965ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் முக்கியமாக கூறுகையில், போரானது வரவு செலவு அறிக்கை அல்ல. அதிக மதிப்பு கொண்ட எல்லைகள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு ஆகியவற்றை கருத்தில் கொண்டது. இந்த போரில் பங்காற்றிய மேஜர் புபீந்தர் சிங்கிற்கும் எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன் என அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply