அமெரிக்காவில் இந்து மதக்கோவிலில் வெறுப்பூட்டும் சித்திரம்: கெட் அவுட் என எழுதி மர்ம நபர்கள் விஷமத்தனம்
வாஷிங்டனின் சியாட்டில் நகரின் ஸ்னோகோமிஷ் கவுண்டியில் உள்ள இந்து கோவிலின் சுற்றுச்சுவரில் மர்ம நபர்கள் ‘ஸ்வஸ்திக்’ முத்திரையை வரைந்து அதன் மேலே இனவெறியை வெளிப்படுத்தும் ‘கெட் அவுட்’ விஷமத்தனமான வாசகங்களை எழுதியிருந்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில வருடங்களுக்கு முன்னரும் கோவிலின் சுற்றுச்சுவரில் இது போன்ற முத்திரையை மர்ம நபர்கள் வரைந்திருந்தனர். ஆனால் அதில் எதுவும் எழுதப்படாததால் போலீசில் புகார் அளிக்கவில்லை. தற்போது முத்திரையின் மேல் மர்ம நபர்கள் சிலர் ‘வெளியே போ’ என்று எழுதியிருப்பது வருத்தமளிக்கிறதென்று கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் நித்யா நிரஞ்ஜன் தெரிவித்தார்.மேலும் “இது போன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் நடக்கக்கூடாது. இது குடியேறியவர்களுக்கான நாடு. எங்களை வெளியேற சொல்வதற்கு நீங்கள் யார்? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
தீங்கிழைக்கும் துன்புறுத்தல் என்ற வகையில் இந்த வழக்கை ஸ்னோகோமிஷ் கவுண்டி ஷெரீபின் துறை விசாரித்து வருகிறது. நேற்று கோவிலை பார்வையிட்ட அந்த கவுண்டியின் உயர் அதிகாரிகள், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
20 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்க, இந்திய மக்கள் வழிபட்டு வரும் அந்தக் கோவிலில் இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply