அரசியலுக்கு வரமாட்டேன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

நுகேகொடை கூட்டத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை எனவும், மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமும் தனக்கில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நுகேகொடையில் நாளை பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.இந்நிலையில், அந்த கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் தனக்கில்லை எனவும், தனது புதல்வரான நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவே குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply