எமது ஆட்சியில் மீளவும் ஈழம் உருவாகுவதற்கு இடமளிக்கப்போவதில்லை : பிரதமர் ரணில்

எமது ஆட்­சியில் மீளவும் ஈழம் உரு­வா­கு­வ­தற்கு இட­ம­ளிக்கப் போவ­தில்லை. அதற்கு துணை­போ­வ­தாக எம்­மீது சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை ஒரு­போதும் ஏற்றுக் கொள்ள முடி­யாது என நிரா­க­ரித்­துள்ள பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க வட­மா­காண சபை­யா­னது இனப் படு­கொலை தீர்­மா­னத்தை அவ­ச­ர­மாக நிறை­வேற்­றி­யமை தொடர்பில் தமக்கு கேள்வி எழுந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார். அதே­நேரம் குறித்த தீர்­மானம் மிகவும் கவ­லை­ய­ளிப்­ப­தாக அமைந்­துள்­ள­தாக தெரி­வித்த பிர­தமர் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வதன் மூலமே நாட்டின் பொரு­ள­ாதா­ரத்தை சிறப்­பான முறையில் முன்­நோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார். தனியார் தொலைக்­காட்­சி­யொன்­றிற்கு நேற்று அவர் வழங்­கிய விஷேட செவ்­வி­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் புதிய அர­சியல் முறையை ஏற்­ப­டுத்­து­வது எமக்­குள்ள பாரிய சவா­லாகும். இந் நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டி நல்­லாட்­சி­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்தும் நோக்­கி­லேயே நாம் ஆட்சி பீடம் ஏறினோம்.

குறித்த இலக்­கு­களை பொறு­மை­யுடன் கையாண்டு வெற்றி கொள்ள வேண்டும். இதே­வேளை புதிய பொரு­ளா­தார முறை­மையை கொண்டு பத்து லட்சம் தொழில் வாய்ப்­பினை பெற்றுக் கொடுப்­பது நாட்டின் கடன் சுமை­யினை போக்கி விவ­சாயம் உள்­ளிட்ட நாட்டின் ஏற்­று­மதி துறையை மேம்­ப­டுத்­து­வதே நோக்­க­மாகும். அத்­தோடு சர்­வாதி­கார ஊழல் மோச­டி­க­ளு­ட­னான ராஜ­பக் ஷ ஆட்­சியை தோல்­வி­ய­டைய செய்து நாட்டின் புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை கொண்டு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை நீக்கி பாரா­ளு­மன்­றத்­துக்கு அதி­காரம் வழங்­கு­வது முக்­கிய குறிக்­கோ­ளாகும். அதற்­காக வேண்­டியே மக்கள் வரம் எமக்கு கிடைக்கப் பெற்­றது.

மேலும் அர­சியல் யாப்பின் 18 ஆவது திருத்தச் சட்­டத்தை நீக்கி 17ஆவது திருத்தச் சட்­டத்தை மீள கொண்டு வந்து சுயா­தீன ஆணைக்­கு­ழுவை நிய­மித்து நீதியை நிலை­நாட்­டு­வதே எமது 100 நாள் வேலைத்­திட்­டத்தின் அத்­தி­வா­ர­மாகும்.

ஊழ­லுக்கு எதி­ரான விசா­ரணை

மேலும் முன்­னைய அரசில் இடம்­பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசா­ரணை செய்து வரு­கின்றோம். குறித்த விசா­ர­ணையை இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு முன்­னெ­டுத்து வரு­வ­துடன் பொலி­ஸாரும் இத்­த­கைய விசா­ர­ணையை செய்து வரு­கின்­றனர்.எனவே சட்­டத்­திற்கு மதிப்­ப­ளித்து உரிய வகையில் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்டு மோச­டி­கா­ரர்கள் கைது செய்­யப்­ப­டு­வார்கள். இருந்த போதிலும் இது தொடர்பில் அவ­சர போக்­கினை கடைப்­பி­டிக்க முடி­யாது.

ஊடக சுதந்­திரம்

2003 ஆம் ஆண்டு கரு ஜெய­சூ­ரிய பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பித்த தகவல் அறியும் சட்ட மூலத்­தி­லுள்ள பரிந்­துரை கொண்ட தகவல் அறியும் சட்ட மூலத்தை பாரா­ளுமன்­ற

த்தில் சமர்ப்­பிக்­க­வுள்ளோம். குறித்த சட்­ட­மூ­லத்­திற்கு சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் ஆலோ­ச­னை­களை பெற­வுள்ளோம். இதே­வேளை பிரித்­தா­னிய பாரா­ளுமன்ற முறை­மை­யி­லி­ருந்து விலகி ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்ற முறை­மையை ஏற்­ப­டுத்­த­வுள்ளோம்.

ஈழக் குற்­றச்­சாட்டு

இலங்­கையில் மீண்டும் ஈழம் அமைப்­பது தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டு­களை எம்மால் ஏற்றுக் கொள்ள முடி­யாது. தேசிய சுதந்­திர தின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பங்கு பற்­றி­யது. இது நல்­லி­ணக்­கத்­துக்கு கிடைத்த வெற்­றி­யாகும். எமக்கு புலிச்­சாயம் பூசும் தரப்­பி­னர்­களின் கைக்குள்ளே கே.பி. எனப்­படும் குமரன் பத்­ம­நாதன்இ கருணா அம்மான் ஆகியோர் உள்­ளனர். மேலும் 2005ஆம் ஆண்டு தேர்தலில் இர­க­சிய ஒப்­பந்­தத்­தி­னூ­டா­கவும் பாரிய தொகை நிதியை வழங்கி தமிழ் மக்கள் வாக்­க­ளிப்­பதை நிறுத்தி என்னை தோற்­க­டித்­தார்கள். அது­மாத்­தி­ர­மன்றி எமது தரப்­பி­னர்­களில் உள்ள ஜெனரல் சரத் பொன்­சேகாஇ முன்­னைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகி­யோரை கொலை செய்ய விடு­தலை புலி­களே முயற்­சித்­தனர். எனவே அவ்­வா­றா­ன­தொரு நிலை­மையில் விடு­தலை புலி­களை மீள உரு­வாக்க வேண்­டு­மென்ற தேவை எமக்கு கிடை­யாது. அதற்கு ஒரு­போதும் நாம் இட­ம­ளிக்கப் போவ­தில்லை.

வட மாகா­ண­சபை பிரே­ரணை

வட­மா­காண சபையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் எமக்கு கவ­லை­ய­ளிக்­கின்­றது. வட­மா­காண சபை ஏன் இதனை அவ­ச­ர­மாக முன்­னெ­டுத்­தது என்ற கேள்வி எமக்­குள்­ளது. எனவே இது குறித்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்­குள்­ளேயே குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஏற்றுக் கொள்ளத் தக்க பரிந்துரைகள் தொடர்பில் மீளப்பரி சீலிக்கவுள்ளோம். மாகாணசபை முறைமையை அமுல்படுத்துவது எமது நோக்கமாகும். தேசிய பிரச்சினை தொடர்பில் கூட்டமைப்புடனும் ஏனைய கட்சிகளுடனும் எதிர் வரும் காலங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply