நைஜர் கிராமத்தின் மீது விமானத் தாக்குதல்: 36 பேர் பலி
நைஜீரியாவின் எல்லையிலுள்ள நைஜர் நாட்டுக் கிராமத்தில் இறுதி ஊர்வலத்தின் மீது நடந்த விமானத் தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயமடைந்தனர்.செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இந்த இறுதி ஊர்வலத்தின் மீது விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது யார் என்று தெரியவில்லை; அந்த விமானம் எங்கிருந்து புறப்பட்டது என்றும் கண்டறிய முடியவில்லை என்று நைஜர் ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது. சமீப காலங்களில் போகோ ஹராம் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் நைஜர் நாடும் பங்கு கொண்ட நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் நைஜீரிய அரசு இருக்கலாம் என்று உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply