அடக்குமுறைகளை கையாள நாம் ஒருபோதும் விரும்பவில்லை
இனவாதிகளாக செயற்பட்டு சமூக பிரிவினையை ஏற்படுத்தவோ அல்லது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு அடக்கு முறைகளை கையாளவோ நாம் ஒரு போதும் விரும்பவில்லை. அப்பாவி முஸ்லிம்களை எமது உறவுகளாகவே நேசிக்கின்றோம் என தெரிவிக்கும் பொதுபலசேனா பௌத்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சவூதி அரேபியா என்ற நினைப்பில் இலங்கைக்குள் செயற்பட்டால் வேடிக்கை பார்க்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.பொதுபலசேனா பௌத்த அமைப்பினால் நேற்றுமுன்தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போது முஸ்லிம் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொது பல சேனா அமைப்பு கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பல செயற்பாடுகளை செய்ததாக ஊடகங்கள் தவறாக எம்மை சித்திரித்துவிட்டது. நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்படவில்லை. அப்பாவி முஸ்லிம் மக்களை நாம் ஒரு போதும் தண்டிக்கவில்லை. தர்கா நகர் சம்பவம் சிங்கள சமூகத்தை தவறாக சித்திரித்து விட்டது. அரசினால் நடந்த குழப்பங்கள் அனைத்திற்கும் பின்னணியில் பிரிவினைவாத முஸ்லிம் குழுக்களே காரணம். ஆனால் முஸ்லிம் அமைப்புக்களும் அரசியல் வாதிகளும் பக்கச்சார்பாக கருத்துக்களை பரப்பி விட்டனர்.
நாம் முன்வைத்த கருத்துக்கள் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிரானதல்ல. நாம் தெரிவித்த கருத்துக்கள் அனைத்துமே பிரிவினையைத் தூண்டும் தீவிரவாத முஸ்லிம் குழுக்களுக்கு மட்டுமே சாரும். ஆனால் எமது கருத்துக்களை அப்பாவி முஸ்லிம் சமூகத்திடம் தவறாக கொண்டு சென்று விட்டனர். நாம் ஹலால் முறைமையினை எதிர்க்கின்றோம். அதற்கு காரணம் உள்ளது இலங்கை பன்முக சமூக நாடு. இது சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய தீவிரவாத சட்டதிட்டம் உள்ள நாடெனின் இங்கு மத சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். ஆயினும் பல இன மக்கள் வாழ்கின்ற நிலையில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
அதேபோல் ஆடைகளிலும் இஸ்லாமிய சட்டங்கள் மோசமாகவே நடந்து கொள்கின்றது. முக மூடி உடைகள் அணிவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது. அதேபோல் நபரை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபோது எப்படி சமூக ஒற்றுமை நோக்கி பயணிப்பது. மேலும் முகமூடி போன்ற ஆடைகள் அணிவது அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இது தொடர்பில் எம்மால் இணங்கி செயற்பட முடியாது.
மேலும் சிங்கள நபர் தமிழ் நபரை திருமணம் செய்து கொள்வதால் மத சிக்கல்கள் எதுவும் வரப் போவதில்லை. ஆனால் சிங்கள தமிழ் நபர் ஒருவர் முஸ்லிம் நபரை விரும்பி திருமணம் செய்தால் மட்டுமே மத மாற்ற செயற்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதேபோல் சிங்கள தமிழ் பெண்களை மதம் மாற்றி இஸ்லாமிய மதத்தின் பால் மாற்றும் நடவ டிக்கை இன்றும் தொடர்கின்றது. இது அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள முடி யாது. இலங்கை முஸ்லிம் நாடு அல்ல. அதனை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் வைத்தே வாழ வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply