துறைமுக நகரம் உடன்படிக்கையை இலங்கை மதிக்க வேண்டும் : சீனா
கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கத்தின் முடிவுக்கு சீனா சம்மதம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த கால அரசாங்கம், வேறொரு நாட்டுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நடைமுறை அரசாங்கம் மதிக்க வேண்டுமெனவும் இது ஜனநாயக நாடொன்றின் கடமையென்றும் சீன துதரக அதிகாரி¦ யாருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆதரவில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘போர்ட்சிட்டி’ எனப்படும் துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்குமுகமாகவே சீன துதரக அதிகாரி மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply