பயங்கரவாதத்தை தடுக்க சர்வமத கூட்டம்: ஐ.நா. முடிவு

மத அடிப்படைவாதம் காரணமாக நிகழும் பயங்கரவாதச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு மதத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை வரும் மாதங்களில் கூட்டவிருப்பதாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கூறியதாவது: மதப் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான ஐ.நா. செயல்திட்டத்தின் முதல் கட்டமாக, உலகெங்கிலும் உள்ள பல்வேறு மதங்களின் தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தப்படும்.

மதங்களிடையே புரிதலை ஏற்படுத்தி, சகிப்புத்தன்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் அமையும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply