17 நாடுகளின் தூதரகங்களிலுள்ள சமூக நல அதிகாரிகளுக்கு அழைப்பு
இலங்கையர்கள் பணி புரியும் 17 நாடுகளிலுள்ள தூதுவர் காரியாலயங்களில் சமூக நல ஊழியர்களாக சேவையாற்றி வரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் அனைவரையும் அடுத்து வரும் இரு வார காலத்துக்குள் இலங்கைக்கு வருமாறு வெளி நாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட காலமாக வெளிநாடுகளில் பணியாற்றிவரும் இந்த அதிகாரிகளை நாட்டுக்கு அழைத்ததன் பின்னர், தற்பொழுது வெவ்வேறு காரணங்களைக் காட்டி புறக்கணிக்கப்பட்டுள்ள தகுதியான அதிகாரரிகளுக்கு இப்பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சிங்கள ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply