இந்திய அணுக்கழிவை இலங்கையில் கொட்ட அனுமதியில்லையாம்

இந்திய அணு உலைகளிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை இலங்கையில் கொட்டுவதற்கு இந்திய – இலங்கை அணுசக்தி ஒப்பந்தத்தில் அனுமதியில்லை’ என இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் சம்பிக ரணவாகா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்துவதில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து, புது தில்லியில் திங்கள்கிழமை கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்கள், அனுபவங்களை பரிமாறிக் கொள்வது, மனித வளம் உள்ளிட்ட ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

இந்திய அணுக்கழிவுகளை இலங்கையில் கொட்டுவதற்கு அதில் இடமில்லை என்றார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply