சிரியாவுக்குள் புகுந்து துருக்கி வீரர்கள் மீட்பு: ராணுவம் அதிரடி நடவடிக்கை
சிரியா எல்லை பகுதியில் உஸ்மான் மன்னரின் பாட்டனார் கலைமான் ஷாவின் நினைவிடம் உள்ளது. இவர் ஆட்டோமன் அரசை நிறுவியவர். இந்த நினைவிடம் துருக்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் என சர்வதேச ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே அங்கு பாதுகாப்பு பணியில் துருக்கி ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். துருக்கி தேசிய கொடியும் அங்கு பறக்க விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் சிரியாவின் கோபானே பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதனால் இந்த நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த துருக்கி ராணுவ வீரர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதற்கிடையே கோபானே பகுதியை குர்த் படையினர் அமெரிக்க கூட்டு படை உதவியுடன் சமீபத்தில் மீட்டனர். இருந்தும் தொடர்ந்து துருக்கி வீரர்கள் சிரியா கட்டுப்பாட்டில் இருந்து வந்தனர்.
எனவே நேற்று முன்தினம் இரவு 600 துருக்கி ராணுவம் அங்கு அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தியது. அதில் 100 பீரங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் போர் விமானங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.
முடிவில், அங்கு சிக்கியிருந்த ராணுவ வீரர்கள் அதிரடியாக மீட்கப்பட்டனர். இந்த ராணுவ நடவடிக்கையின் போது துருக்கி ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
மேலும் கலைமான் ஷாவை அடக்கம் செய்த பெட்டகத்தையும் துருக்கிக்கு ராணுவம் கொண்டு சென்றது. துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு சிரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டின் இறையாண்மை மீது துருக்கி தாக்குதல் நடத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply