அரபு நாடுகளின் கூட்டுப் படை அமைக்க எகிப்து அதிபர் யோசனை
மேற்கு ஆசியப் பகுதியின் பாதுகாப்புக்கும், பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் அரபு நாடுகளின் கூட்டுப் படையை அமைக்கலாம் என எகிப்து அதிபர் ஃபட்டா அல்-சிசி யோசனை தெரிவித்துள்ளார்.எகிப்து தொலைக் காட்சியில் அவரது உரை ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது.அந்த உரையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: எகிப்து ராணுவம் ஒருபோதும் பிற நாடுகளின் மீது படையெடுக்காது. எனினும், லிபியாவில் எகிப்து கிறிஸ்தவர்கள் 21 பேரின் படுகொலைக்குப் பழி வாங்காமல் என்னால் கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் செல்ல முடியாது.
எனவே லிபியாவிலுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் 13 நிலைகள் மீது எகிப்து விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தின.
கடந்த 2013-ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி தலைமையிலான மதவாத அரசை நீக்குவதற்கு ஆதரவளித்த சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அல்-சிசி.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply