ஆஸ்திரேலியத் தடுப்பு முகாம்களில் பாலியல் பலாத்காரங்கள்

ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்றுள்ளன என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாங்கள் விசாரித்து வருவதாக அந்நாட்டின் குடிவரவுத்துறை தெரி வித்துள்ளது.அவ்வகையில் சிறார்கள் மீதான பலாத்காரங்கள் உட்பட நாற்பது சம்பவங்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மாதம் வெளியான சுயதீனமான அறிக்கையொன்றிலேயே, தடுப்பு முகாம்களில் சிறார்கள் உட்பட பலர் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியிருப்பது குறித்த பல செய்திகள் வெளியாயின.

பசஃபிக் தீவு நாடான நவ்ரூவிலுள்ள ஆஸ்திரேலிய அகதிக் கோரிக்கைகளை ஆய்வு செய்யும் முகாம் ஒன்றில், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 16 வயது பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில், இப்போது மருத்துவமனையில் உள்ளார்.

இதேவேளை தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்களை அங்கிருந்து அகற்ற தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply