அமெரிக்காவில் இந்திய மாணவர் கைது: சக மாணவியை கற்பழித்ததாக குற்றச்சாட்டு
அமெரிக்காவில், உள்ள நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் அபய் பந்த் (வயது 18). இந்தியர். புதுடெல்லியை சேர்ந்தவர். இவர் தனது சக மாணவியின் அறைக்கு, அதிகாலை நேரத்தில் சென்று அவரை கற்பழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான புகாரின்பேரில், பல்கலைக்கழக போலீசார் அபய் பந்த் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவர் ஆஸ்வேகோ டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.அந்த பல்கலைக்கழக விதிமுறைப்படி, பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட எந்தவொரு குற்றச்சாட்டும் மாணவர் ஒருவர் மீது எழுந்தால், அவர் மீது பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். எனவே அபய் பந்த் தொடர்ந்து, நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாத நிலை ஏற்படும் என தகவல்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply