நைஜீரியா இரட்டை குண்டுவெடிப்பில் 27 பேர் பலி
நைஜீரியாவில் 2 பேருந்து நிலையங்களில் செவ்வாய்க்கிழமை குண்டு வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டுப் பொதுத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் நிகழ்ந்துள்ள இந்த இரட்டை குண்டுவெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலமான யோபேவில் போடிஸ்கும் என்ற இடத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் குண்டுவெடித்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.அடுத்த சில மணி நேரத்துக்குள், கானோ நகரப் பேருந்து நிலையத்தில் குண்டுவெடித்ததில், மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு, போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 13,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக நைஜீரிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராக்கிலும் குண்டுவெடிப்பு: இதனிடையே, இராக்கில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 31 பேர் உயிரிழந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply