கொடப்பிட்டிய தற்கொலை தாக்குதலுக்கு 14 முஸ்லிம் நாடுகள் கண்டனம் : வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம
அக்குரஸ்ஸ, கொடப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசலில் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலை முஸ்லிம் நாடுகள் பல வன்மையாகக் கண்டித்துள்ளன. நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தையொட்டி, அரசாங்கத்தின் அனுசரணையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலை பங்களாதேஷ், மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன.
இலங்கைக்கான பங்களாதேஷ், மலேஷியா நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும், இந்தோனேஷியாவின் தூதுவர் உள்ளிட்ட இராஜதந்திரிகளும் தமது நாடுகளின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் அமைச்சில் நடந்த கலந்துரையாடலில் 14 முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகள் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
குண்டுத் தாக்குதலில் தப்பிய அமைச்சர்கள் ஏ.எச்.எம். பெளஸி, எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா, வெளிவிவகார அமைச்சரின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்தக் கலந்துரையாடலில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அமைச்சர் போகொல்லாகம முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து கடந்த காலங்களில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்தும் வடமாகாணத்திலிருந்து 1990ம் ஆண்டு மேற்கொண்ட முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை அரசாங் கத்தைப் புரிந்துகொண்டு அதன் செயற்பாடுகளுக்கு சர்வ தேச சமூகம் ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் கேட் டுக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply