கொழும்பு வரும் வாகனங்களுக்கு மொரட்டுவையிலிருந்து புதிய நடைமுறை : அமைச்சர் டலஸ் அழகப்பெரும
தென்பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் தனியார் வாகனங்களை மொறட்டுவயில் தரிப்பிடமொன்றில் நிறுத்திவிட்டு இணைப்பு பஸ் சேவை மூலம் கொழும்புக்கு வரும் புதிய திட்டமொன்று நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனக்கட்டுப்பாட்டை அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்றுக் காலை ஆரம்பித்து வைத்தார்.
இதன் மூலம் காலி வீதி, கட்டுபெத்த இ. போ. ச. பயிற்சி கல்லூரிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பார்க் அன்ட் ரைட் தரிப்பிடத்தில் வானங்களை நிறுத்திவிட்டு ‘சிற்றிலைனர்’ என்ற இணைப்பு சொகுசு பஸ் மூலம் கொழும்புக்குள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இணைப்பு சொகுசு பஸ்சேவை காலை 6.30 ல் இருந்து ஆரம்பித்து காலை 8.30 வரை நடத்தப்படும். அதேபோல பிற்பகலில் 4.30க்கு ஆரம்பித்து இரவு 7.30 வரை சேவையில் ஈடுபடுத்தப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அமால் குமாரகே கூறினார்.
இந்த பஸ்களில் பிரயாணம் செய்பவர்கள் ஒருவழிப் பயணத்திற்கு 170 ரூபாவைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும: மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி கொழும்பிற்கு வெளிமாவட்டத்தில் இருந்து ஒரு நாளைக்கு ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் வருகின்றனர். இவர்கள் 12 பிரதான பாதைகளூடாகவும் மூன்று புகையிரத பாதைகள் ஊடாகவும் வருகின்றனர். 12,000 அரச தனியார் பஸ்கள் மூலமும் இரண்டு இலட்சம் பேர் கார் மற்றும் ஏனைய வாகனங்கள் மூலமும் கொழும்பை வந்தடைகின்றனர். வாகனங்களைக் கட்டுப்படுத்தவே இப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply