கார் குண்டு தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் உள்ள ஒரு சோதனைச் சாவடிக்குள் தற்கொலை தீவிரவாதி ஒருவன் காரை மோதச் செய்தான். இதில் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டு இருந்த 8 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள வானா நகரின் அருகில் நடந்தது.

இந்த நகரில் அல்கொய்தா, தலீபான் தீவிரவாதிகள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் உள்ள சோதனைச் சாவடியில் ராணுவ வீரர்கள் பணியில் இருந்த நிலையில், வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட ஒரு காரை தற்கொலை தீவிரவாதி ஒருவன் ஓட்டிக்கொண்டு சென்று சோதனைச் சாவடி மீது மோதினான். இதில் 8 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 20 பேர் பலியான சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு பிறகு இந்த தாக்குதல் நடந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply