ஐஎஸ் தீவிரவாதிகள் பெஷ்மெர்கா படைக்கு எதிராக குளோரின் பயன்படுத்தியதாக தகவல்
ஐஎஸ் தீவிரவாதிகள் பெஷ்மெர்கா படையினருக்கு எதிரான போரின் போது குளோரின் வாயுவை பயன்படுத்தி உள்ளதாக ஈராக் தெரிவித்துள்ளது. குளோரின் வாயுவை ரசாயன ஆயுதமாக பயன்படுத்தியதற்கு ஆதாரம் உள்ளதாக ஈராக் கூறியுள்ளது. இதுதொடர்பாக குர்தீஷ் பிரிவின் பாதுகாப்பு பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு ஈராக்கில் ஐஎஸ் அமைப்பினர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய இடங்களில் இருந்து மண் உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து ஆய்வகத்தில் மேற்கொண்ட சோதனையில், குளோரின் வாயு ஆயுதங்களில் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக கூறியுள்ளது. முன்னதாக 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற ரசாயன ஆயுதங்கள் குறித்த மாநாட்டில், போரின் போது ஆயுதங்களில் ரசாயனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply