ஐ.ம.சு.மு.வின் தலைவராக மைத்திரியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது :முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­ய­க்கார

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­பதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை மீண்டும் கூட்­ட­ணியின் தலை­வ­ராக்­குவோம் என தெரி­விக்கும் முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­ய­க்கார எம்மால் சில தவ­றுகள் கடந்த காலத்தில் இழைக்­கப்­பட்­ட­மை­யினை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஏக­ம­ன­தாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் கூட்­ட­ணியின் பங்­காளிக் கட்­சிகள் கலந்து கொள்­ளா­மைக்­கான காரணம் என்­ன­வென்­பதை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இருக்­கின்­றமை அக்­கட்­சியின் தீர்­மானம். ஆனால் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்டமைப்பின் தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தெரிவு செய்­துள்­ளமை ஏற்றுக் கொள்ள முடி­யாது. நேற்று முன்­தினம் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் குழுக்­கூட்டம் கூடி­யி­ருந்த போதிலும் கூட்­ட­மைப்பின் பிர­தான பங்­கா­ளிக்­கட்­சிகள் இக்­கூட்­டத்தில் பங்­கு­பற்­ற­வில்லை.

ஐக்­கிய தேசிய கட்­சியின் துணை­யுடன் தேசிய அர­சாங்கம் அமைத்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்லும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிடியில் சிக்­கி­யுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணி­யையும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு காவு கொடுத்து அடி­மைப்­ப­டுத்த நினைக்­கின்றார். இக் கோட்­பாட்­டினை எம்மால் ஏற்றுக் கொள்ள முடி­யாது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாட்­டினை பற்றி எமக்கு கவ­லை­யில்லை. ஆனால் ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­றுள்­ள­மை­யினை எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அடுத்த பொதுத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ போட்­டி­யிட வேண்டும். அவ்­வாறு போட்­டி­யி­டு­வ­தாயின் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் கீழேயே போட்­டி­யிட வேண்டும்.

அதற்­கான சகல முயற்­சி­க­ளையும் நாம் எடுத்து வரு­கின்றோம். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ஐக்­கிய தேசி­யக்­கூட்­ட­மைப்பின் சூழ்ச்சி திட்டம் சர்­வ­தேச சதித்­திட்டம் என்­பன மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக்­கின. மக்­களின் ஆத­ரவு யாருக்­கென்­பது இன்­னமும் உறு­திப்­ப­டாது உள்­ளது.

யுத்த வெற்றி நாட்டின் அபி­வி­ருத்தி என்­பன மஹிந்த ராஜ­ப­க் ஷவை மக்­க­ளி­டையே தலை­வ­னாக்­கி­ன. ஆனால் தவ­றுகள் இல்லாத தலை­மைத்­துவம் என்று நாம் கூற­மாட்டோம். சில தவ­றுகள் நமது பக்­கமும் இருந்­தது. ஆனால் அவை சரி செய்யக் கூடியவை. ஐக்கிய தேசிய கட்சி இன்று செய்து வருவது நாட்டையே அழிக்கும் மோசமான தவறுகள். சர்வதேச சதி திட்டத்தினை நாட்டில் செயற்படுத்த முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததே. ஆனால் அதனையே இன்று ஐக்கிய தேசியக்கட்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply