ஏப். 23 பாராளுமன்றம் கலைப்பு வாக்குறுதியை நிறைவேற்ற தவறுவது நம்பிக்கை துரோகம்
புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்ததன்படி ஏப்ரல் 23 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தை கலைக்க தவறினால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகிவிடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி வெளிவிவகார அமைச்சருமான சஜித் பி. பெரோ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் புதிய அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணை ஏப்ரல் 23 ஆம் திகதி வரையே செல்லுபடியாகும் என்பதனால் பாராளுமன்றம் கலைக்கப்படுவதனை இனிமேலும் இழுத்தடிக்க முடியாது எனவும் நேற்று அவர் உறுதியாக கூறினார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைவரென்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வுக்கு குறித்த தினத்தில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஆதரவு மேற்படி கட்சி உறுப்பினர்களிட மிருந்து கிடைக்கு மெனவும் பிரதிய மைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். வெளிவிவகார அமைச்சில் நேற்றுக்காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞா பனத்தில் குறிப்பிடப்பட்டதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எமது ஏனைய கட்சி பங்குதாரர்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர். அதே நிலைப்பாட்டிலேயே அவர்கள் தொடர்ந்தும் உள்ளனர் என்றும் சுட் டிக்காட்டினார். ஏப்ரல் 23 இனைத் தொடர்ந்து புதிய அரசாங்கத்தினால் ஆட்சி செலுத்த முடியாது என்றே ஜே. வி.பி கூறுகின்றது. அதே நிலைப்பாட்டிலேயே நானும் உள்ளேன்.
புதிய அரசாங்கம் வாக்குறுதியளித்ததன் படி நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக் கின்றதோ அதேயளவு முக்கியத்துவத்தை ஏப்ரல் 23ஆம் திகதியன்று பாராளு மன்றத்தை கலைப்பதிலும் செலுத்தி வருகின்றது. எமது நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், சுயாதீன ஆணைக் குழுக்களை நியமிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை வரையறை செய்தல், தகவலறியும் சட்டமூலத்தை பாராளு மன்றத்திற்கு சமர்ப்பித்தல் ஆகியவற்றை நிறைவேற்றும் அதேசமயம் இயலு மானவரை விரைவில் தேர்தல் மறுசீரமைப் புக்களை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply