தமிழ் மக்­களை குழி­தோண்­டிப்­பு­தைக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன :மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப்

சுதந்­தி­ர­ம­டைந்த காலம் முதல் தற்­போது வரையில் தமிழ் மக்­களை குழி­தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­வித்த மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் தமிழ்த்­தே­சிய அர­சியல் சக்­தி­களை ஒன்­று­ப­டுத்தி தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை அர­சியல் கட்­சி­யாக பதிவு செய்­யப்­ப­ட­வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தி­னார்.இலங்கை தமிழ் ஊட­க­வி­ய­லாளர் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் விரு­து­வ­ழங்கும் விழாவும் கௌர­விப்பு நிகழ்வும் நேற்­றைய தினம் கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் இடம்­பெற்­றன. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பார­ாளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் மனோ ­க­ணே­சனும் கௌர­வவி­ருந்­தி­னர்­க­ளாக அமைச்சர் திகாம்­பரம் மற்றும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீ.யோகேஸ்­வரன் மற்றும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகி­யோரும் மாகாண, மாந­கர உறுப்­பி­னர்கள், புத்­தி­ஜீ­விகள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் என பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இந்­நி­கழ்வில் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் மேலும் கூறி­ய­தா­வது,

தமி­ழர்­களின் உரி­மைக்­கான போராட்­டத்தில் தமது உயிரைக் கூட தியாகம் செய்­யு­ம­ள­விற்கு துணிந்து உயிரைப் பணயம் வைத்­த­வர்கள் ஊட­க­வி­யலாளர்கள் ஆவர். அவர்­களின் தியாகம் தமிழ் மக்­களால் என்றும் மறக்­க­மு­டி­யா­த­வொரு விட­ய­மாகும். ஆயு­த­மேந்­திப்­போ­ரா­டி­ய­வர்கள் ஒரு­பு­ற­மி­ருக்க மறு­பு­றத்தில் பேனா­மு­னையால் ஊட­க­வி­ய­லா­ளர்கள் போரா­டி­னார்கள்.

உண்­மைக்கு சான்று பக­ரப்­ப­ட­வேண்டும். நீதிக்கு வழி­வி­ட­வேண்டும். தமிழ் மக்கள் உரி­மை­யோடு வாழ வேண்டும். தன்­மா­னத்­தோடு வாழ­வேண்டும். அதற்­காக அர­சியல் யதார்த்­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தீர்வு வேண்டும். இந்த நாடா­னது போர் நடை­பெ­று­வ­தற்­கு­ரிய நாடல்ல.இந்த நாடு பல்­லி­னங்­களைக் கொண்ட நாடு. பல கலா­சா­ரங்­களை, மொழி­களை, வர­லாற்றுப் பின்­ன­ணி­களைக் கொண்ட நாடாகும். அது­மட்­டு­மன்றி பல­வ­கை­யான பொரு­ளா­தார வளங்­களைக் கொண்ட நாடாகும். இந்த நாடு சுதந்­தி­ரம்­பெற்ற நாடு என குறிப்­பி­டு­கின்­றார்கள். ஆனால் சுதந்­திர பெற்ற அன்­றி­லி­ருந்து இன்­று­வ­ரையில் தமிழ் மக்­களை குழி­தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அவர்­களின் இருப்­புக்கு சவா­லாக இருந்­து­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தமிழ் மொழியின் சிறப்பு

தமிழ் மொழி என்­பது செம்­மொ­ழி­யாகும். இவ்­வு­ல­கத்தில் தமிழ் மொழிக்­கு­ரிய சிறப்பை சீன மொழி மட்­டுமே கொண்­டி­ருக்­கின்­றது. அதே­நேரம் சமஸ்­கி­ருதம் போன்ற பல பண்­டைய மொழிகள் காலப்­போ­க்கில் மரு­கி­யி­ருக்­கின்­றன. இருப்­பினும் தமிழ் மொழி­யா­னது இன்­னமும் தன்மை அழி­யாது செழு­மை­யுடன் இருக்­கின்­றது. அதற்­காக தலை­ந­கரில் ஒரு சங்­க­மமைத்து செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது மிகப் சிறப்­பா­ன­தொரு செயற்­பா­டாகும். அதே­நேரம் முஸ்லிம் சமூ­கத்­தி­னரும் தமிழ் மொழியை வளர்ப்­பதில் பங்­கா­ளர்­க­ளாக இருக்­கின்­றார்கள். ஆகவே தமிழ் மொழியை பாது­காத்து வளர்க்கும் செயற்­பா­டு­களில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும். தமி­ழர்கள் எங்­கெல்லாம் இருக்­கின்­றார்­களோ அங்­கெல்லாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து தமிழ் மொழி­வ­ளர்ப்பில் ஈடு­ப­ட­வேண்டும். இதற்­காக ஊட­க­வி­ய­லா­ளர்கள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும்.

பிரி­வினை வேண்டாம்

தமி­ழர்கள் சித­ற­டிக்­கப்­பட்டுள்­ளார்கள். எமக்குள் சாதி, மதம், சமூகம் என பல பிரி­வி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அவை அனைத்தும் கைவி­டப்­பட்டு அனைத்து மக்­களும் ஒன்­று­ப­ட­வேண்டும். மனி­தர்­களை மனி­தர்கள் மதிக்க வேண்டும். எல்லா சமூ­கங்­களும் ஒற்­று­மை­யாக இருக்­க­வேண்டும். அவ்வாறில்லாது உரி­மைக்­காக போரா­டு­வதில் எந்­த­வி­த­மான பயனு­மில்லை. ஆகவே பிரிவி­னை­களை நோக்­கிய பழைமை­வா­ய்ந்த சிந்­த­னைகள் அனைத்தும் தோற்­க­டிக்­கப்­ப­ட­வேண்டும். புதிய சிந்­த­னைகள் அடித்­த­ள­மிட்டு கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்டும். இச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக நட­வ­டிக்­கை­களை தமிழ் ஊட­கங்கள் முன்­னெ­டுக்க வேண்டும்.

உண்­மையின் முக்­கியம்

சிலர் தாம் நினைப்­பதே உண்மை. அத­னையே அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என நினைக்­கின்­றார்கள். அவர்கள் சிறிய வட்­டத்­தி­லேயே சிந்­திக்­கின்­றார்கள். அது பொய்­மை­யாகும். கடந்த காலத்­தி­லி­ருந்த அர­சி­யலில் இருந்­த­வர்­களின் பிரச்­சி­னையும் இது­வா­கத்தான் இருந்­தது. தாம் நினைப்­பதே உண்­மை­யென கரு­தி­னார்கள். அனை எல்­லோரும் ஏற்க வேண்டும் என நினைத்­தார்கள். அதனை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்­ள­மு­டியும். உண்­மை­யென்­பது ஒரு­போதும் பொய்­யாக இருக்­க­மு­டி­யாது. அது எல்­லோ­ருக்கும் சொந்­த­மா­ன­தாக இ­ருக்­க­வேண்டும். ஆகவே பொய்­மையில் எமது வாழ்க்­கையை கட்­டி­யெ­ழுப்­ப­மு­டி­யாது. ஊட­க­வி­ய­லா­ளர்­களும், ஊட­கங்­களும் தமி­ழர்­க­ளுக்­கு­ரிய பாதையை அதற்­கான உண்­மையை தெளிவாக அவர்­க­ளி­டத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

சிறு­பான்மை இன­மல்ல

தமிழ் மக்கள் சிறு­பான்மை இன­மல்ல. அவ்­வாறு கூறப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது. அது தவ­றா­னதும் கூட. 1995ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஜனா­தி­ப­தி­யாக பத­விக்கு வந்­த­போது அவரின் முன்­னோர்கள் விட்­ட­த­வ­று­களை விட­வேண்டாம் என கோரிக்கை விடுக்கும் கடி­த­மொன்றை எழு­தி­யி­ருந்தேன். அதே­நேரம் நாம் வர­லாற்று ரீதி­யான ஒரு இனம். எமக்­கான அடை­யா­ளங்கள் இருக்­கின்­றன. ஆகவே நாம் தேசிய இனம் என்­பதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்­பதை அக்­க­டி­தத்தில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தேன். இருப்­பினும் அவ்­வி­ட­யங்கள் தொடர்பில் கூடி­ய­ளவில் கவனம் கொள்­ளப்­பட்­டி­ருக்­க­வில்லை.

போரின் கொடுமை

போர் முன்­னெ­டுக்­கப்­பட்­டதில் உண்­மையே முதற்­கட்­ட­மாக கொல்­லப்­பட்­டது. புதைக்­கப்­பட்­டது. உண்மை என்­பது ஔியாகும். அதன் பிர­காரம் பய­ணிப்­ப­வ­ரா­லேயே நேராக செல்­ல­மு­டியும். இல்­லையேல் குறு­கிய வட்­டத்­திற்­குள்ளே மீண்டும் மீண்டும் சுற்­ற­வேண்­டி­யி­ருக்கும். யுத்­தத்தின் போது இடம்­பெ­யர்ந்து வந்­தி­ருந்த மக்கள் மீது குண்­டுகள் வீழ்ந்து இறந்­தி­ருந்­த­துடன் அவ்­வி­டத்தில் பாரிய கிடங்­குகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. அவ்­வி­டத்­திற்கு நானே முதலில் சென்­றி­ருந்தேன். அதன்­போது பாது­காப்பு தரப்பின் ஊட­கத்தில் புலிகள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டு­விட்­ட­தா­கவும் ஆயு­தக்­கி­டங்கு தாக்­கப்­பட்­ட­தா­கவும் கூறப்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தது. அத்­த­ரு­ணத்தில் முன்னாள் ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்றை எழு­தி­யி­ருந்தேன். நாட்டின் தலை­வ­ராக மக்­க­ளுக்கு வழி­காட்­ட­வேண்­டிய உங்­களை அருகில் இருப்­ப­வர்கள் உத­வி­யா­ளர்கள் தான் இருளில் வைத்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்தேன். அத்­துடன் யதார்த்த நிலை­மைகள் தொடர்பில் தங்­க­ளு­டைய ஊழி­யர்கள் பணி­யாற்­றிக்­கொண்­டி­ருப்­பதால் அவர்கள் மூலம் உண்­மையை அறிந்­து­கொள்ள முடியும் எனவும் வலி­யு­றுத்­தினேன். தமிழ் மக்­களை கொன்று குவிக்கும் போர் வேண்டாம். ஒரு சமா­தான நிலைமை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என வெளிநா­டு­க­ளிடம் கோரினோம். பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என கோரினோம். குறிப்­பாக நோர்வே பிர­த­ம­ரிடம் வலி­யு­றுத்­தினோம். அதனை எழுத்­து­மூ­ல­மா­கவும் அனுப்­பினோம். அவர் இங்கு வருகை தந்து பேச்­சுக்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­னவே தவிர நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

ஏமாற்­றப்­பட்டோம்

எமது அர­சியல் கரு­மங்கள் அனைத்­துமே ஏமாற்­றப்­பட்­ட­தொரு நிலை­மை­யா­கவே இருந்து வந்­துள்­ளது. இவ்­வா­றான நிலை­மைகள் மாற­வேண்டும். தமிழ் மக்­க­ளுக்கு ஒரு தீர்வு கிடைக்­க­வேண்டும் என்ற அடிப்­ப­டை­யி­லேயே தமிழ் மக்கள் சிங்­கள மக்கள் என அவைரும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என விரும்­பினோம். அதன் அடிப்­ப­டையில் புதிய அர­சாங்கம் அமைந்­தது. இருப்­பினும் சில செயற்­பா­டுகள் எமக்கு கவ­லை­ய­ளிப்­ப­தா­கவே உள்­ளன. குறிப்­பாக சிங்­கள மக்­க­ளுக்கு புள­காங்­கிதம் ஏற்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­காக சில விட­யங்­களைக் கூறு­கின்­றார்கள். அவ்­வா­றான விடயங்­களை ஏன் கூற­வேண்டும். ஆகவே அவ்­வா­றான விடயங்கள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.

சிங்­க­ள­வர்க­ளி­டத்தில் கூற­வேண்டும்

தமிழ் மக்கள் யார்? அவர்கள் என்ன விட­யங்­களை கோரு­கின்­றாகள். அவர்­களின் வர­லாற்றுப் பின்­னணி என்ன? அவர்­களின் மொழியின் செழுமை என்ன? போன்ற விட­யங்­களை சிங்­கள மக்கள் மத்­தியில் கொண்டு செல்­ல­வேண்டும். அதற்­காக இன்று ஊட­க­மொன்று காணப்­ப­டா­தி­ருக்­கின்­றது. அவ்­வா­றான ஊட­க­மொன்று உரு­வாக்­கப்­பட்டு சிங்­கள மக்கள் மத்­தியில் அக்­க­ருத்­துக்கள் கொண்­டு­செல்­லப்­ப­ட­வேண்டும் அதற்­கான கரு­மங்­களை ஊட­க­வி­ய­லா­ளர்கள் முன்­னெ­டுக்க வேண்டும். தமி­ழர்கள் விட­யத்தில் அறி­யா­மையில் இருப்­ப­வர்­களை வெளிச்­சத்­திற்கு கொண்­டு­வ­ர­வேண்டும்.

பொய்மை தவறு

ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலைவர் தமிழ் மக்­க­ளுக்கு உரி­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் அது இங்கு இல்லை தமிழ்நாட்­டி­லேயே உள்­ளது எனக் கூறு­கின்றார். அமெ­ரிக்­காவில் வெள்ளையர்­களை பிரித்­தா­னி­யா­வுக்கு செல்­லு­மாறு கூற­மு­டி­யுமா? அதே­போன்று அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்­ள­வர்­களை அயர்­லாந்­துக்கு செல்­லு­மாறு கூற­மு­டி­யுமா? அவ்­வாறு கூறப்­பட்டு அவர்கள் சென்­றார்­க­ளாயின் நீங்கள் கூறு­வதை நாம் ஏற்­றுக்­கொள்ள முடியும். சமயத்தலைவர்கள் பொய்மையை முன்னெடுப்பது தவறானதாகும்.

கட்சியாக பதிவு செய்யவேண்டும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவேண்டும். குறிப்பாக ஏனைய தமிழ்த் தேசிய தலைவர்களையும் உள்ளடக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்வதன் அவசியத்தை அவர்களிடத்தில் கூறியிருக்கின்றேன். இதுதொடர்பாக நான் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தேன். அத்துடன் தற்போதும் தமிழ்த் தலைவர்கள் அவ்விடயத்தை முன்னெடுக்கவேண்டும் எனக்கோருகின்றேன். குறிப்பாக தமிழர்கள் செறிவாக வாழும் எட்டு மாவட்டங்களில் உள்ள அரசியல் பிரநிதிகளள் ஒன்றுபடவேண்டியது மிக முக்கியமானதாகும். அனைத்து தமிழ் தரப்புக்களும் ஒன்றுபட்ட ஒரு காத்திரமான பலமிக்க அரசியல் கட்சியாக இருப்பது சிங்கள அரசியல் சக்திகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். அவ்வாறில்லாது பிரிந்து தனித்தனியாக செயற்படுவதென்பது எமது எதிர்காலத்தை பலவீனப்படுத்துவதாக அமைந்து விடும். ஆகவே அரசியல் கட்சியாக பதிவு செய்வது என்பது மிகவும் முக்கியவிடயமொன்று என்பதுடன் இவ்விடயத்தை வலியுறுத்தியும் இச்சிந்தனையை வலுப்படுத்தியும் ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply