இஸ்ரேல் நாடாளுமன்றத்தேர்தல்: லிகுட் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிப்பு
இஸ்ரேல் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே லிகுட் மற்றும் மைய-இடதுசாரி சியோனிக் கூட்டணியும் சமமான வாக்குகளைப் பெற்றுள்ளன. இந்தநிலையில், லிகுட் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். பிரதமர் நெதன்யாஹு தலைநகர் ஜெருசலேமில் வாக்களித்தார். இந்தத் தேர்தலில் பிரதமர் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி, மைய-இடதுசாரி சியோனிக் கூட்டமைப்பு உள்பட மொத்தம் 25 கட்சிகள் போட்டியிட்டன.
தேர்தல் நிறைவடைந்த நிலையில், பிரதமரின் லிகுட் கட்சியும், இட்சாக் ஹேர்சாக்கின் மைய-இடதுசாரி சியோனிக் கூட்டணியும் சமமான வாக்குகளைப் பெற்றுள்ளன. இதனால் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் குழப்பம் நீடித்துவருகிறது. இந்த நிலையில் டுவிட்டரில் கருத்தைப் பதிவு செய்துள்ள பிரதமர் நெதன்யாஹு, லிகுட் கட்சி சிறப்பாக வெற்றிபெற்றிருப்பதாக அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் மார்ச் 25-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply