பங்குச் சந்தை மோசடிகள்; விசாரணைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிப்பது அவசியம் : பிரதமர் ரணில்  

2010ஆம் ஆண்டு முதல் நடந்த பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான பிரேரணையொன்றை பிரதமர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். இலங்கையின் பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்களில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகவும், இவற்றுடன் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பு பட்டிருப்பதாகவும் சந்தேகம் வலுவடைந்துள்ளது.

இதனால் இலங்கையின் பங்குச்சந்தை பரிமாற்றம் தொடர்பில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு பங்குச் சந்தையில் நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும். பங்குச் சந்தை பரிமாற்றத்தின் போது உள்ளக கொடுக்கல் வாங்கல்கள் பல இடம்பெற்றிருப்பதற்கான சாட்சியங்களும், அரசாங்க பணம் பெருமளவில் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டமைக்கான சாட்சியங்களும் உள்ளன.

2010ஆம் ஆண்டு முதல் பங்குச் சந்தை பரிமாற்றத்தில் இடம்பெற்ற மோசடிகள் யாவை என்பதும், அவற்றுடன் யார் தொடர்புபட்டுள்ளார்கள் போன்ற விடயங்களைக் கண்டறியவும் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இந்தக் குழுவுக்கான தலைவரை சபாநாயகர் பிரேரிக்க முடியும்.

இந்தத் தெரிவுக்குழுவானது, பங்குச் சந்தை பரிவர்த்தனை முறைகேடுகளுடன் தொடர்புபட்ட நபர்களிடமுள்ள ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் பதிவுகளை பரிசீலிப் பதற்கும், சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை செய்வதற்கும் அதிகாரம் கொண்டதாக இருக்க வேண் டும். விசாரணைகளுக்கு துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழு தான் நடத்தும் விசாரணைகள் குறித்து அவ்வப்போது இடைக்கால அறிக்கைகளை பாராளு மன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் தனது பிரேரணையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply