சின்னத்தம்பி உதயசிறிக்கு சனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவேண்டும் சிறீரெலோ கட்சி கோரிக்கை

சிகிரியா குகையின் பளிங்கு சுவரில் தனது பெயரை பதிவு செய்ததற்காக  சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சின்னத்தம்பி உதயசிறி எனும் இளம் பெண்ணிற்கு மனிதாபிமான ரீதியில் சனாதிபதி அவர்கள் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிறீரெலோ கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு வெளிவருவதற்காகவே வாழ்க்கைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்னத்தம்பி உதயசிறி எனும் இளம்பெண்ணிற்கு தற்போது உயர்ந்தபட்ச சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையிட்டு சிறிரெலோ கட்சியினராகிய நாம் எமது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உதயசிறி வறுமைப்பட்டவர் என்பவதாலும் ஏற்கனவே வரலாற்று முக்கியதத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்லவில்லை என்பதாலும் குறித்த சுவரில் தனது பெயரை எழுதுவதனால் ஏற்படப்போகும் ஆபத்தினை அறிந்திருக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை ஆகும். இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரின் விடுதலை தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் சிறிரெலோ கட்சி ஈடுபடதிட்டமிட்டுள்ளது.
அதற்கமைவாக நீதிமன்றில் மேன்முறையீடு செய்து காலத்தை வீணடிக்காமல் சனாதிபதியிடம் பொதுமன்னிப்பு வழங்கக்கோருவதே சாலச்சிறந்தது என்று எமக்கு தோன்றுகிறது. எனவே வயது முதிர்ந்த அவரது தயாரின் உடல் நலம் கருதியும் உதயசிறியின் எதிர்காலம் கருதியும்  மேன்மை தங்கிய சனாதிபதியிடம் பொதுமன்னிப்பு வழங்கக்கோரி மனிதாபிமான ரீதியில் கோரிக்கையினை விடுக்கின்றறோம் அத்துடன் இம் மாணவியின் விடுதலையினை வலியுறுத்தி பாடசாலை மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டமொன்றினையும் நாம் ஆரம்பிக்கவுள்ளோம்.இப்போராட்டத்திற்கு அனைத்துதரப்பினரினதும் ஆதரவினையும் வேண்டிநிற்கின்றோம்.

ஊடகப்பிரிவு
சிறீரெலோ
யாழ்.மாவட்டம்

077-1242732

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply