குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவானது
வடக்கு குஜராத்தில் இன்று நிகழ்ந்த மிதமான நிலநடுக்கம், அம்மாநில மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழப்போ சேதாரமோ ஏற்படவில்லை. வடக்கு குஜராத்தில் உள்ள சபர்கந்தா, பனஸ்கந்தா மற்றும் மேஹ்சன் ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கேட்பிரம்மா என்ற இடத்தில் சில விநாடிகளுக்கு நில நடுக்கத்தின் தாக்கம் இருந்ததாக அறிஞர்கள் கூறியுள்ளனர். மேஹசானா மாவட்டத்தில் உள்ள தரோய் கிராமத்தில் மேற்கு- தென் மேற்காக 15 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொகாண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் பெரிய அளவுக்கு சேதாரம் இல்லை என்று கூறப்பட்டாலும், வடக்கு குஜராத்தில் வரும் காலங்களில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply