ஜப்பானில் அமெரிக்க தூதருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது

ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும், தூதராக பணியாற்றி வரும் கரோலின் கென்னடிக்கும், கொலை மிரட்டல் விடுத்துள்ள நபர் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடியின் மகளான கரோலின், கடந்த நவம்பர் 2013 ஆம் ஆண்டு டோக்கியோவில், ஆசிய நாடுகளுக்கான முதல் பெண் தூதராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கரோலினுக்கு கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து ஜப்பான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கொலை மிரட்டல் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

ஜப்பான் போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின், ஒகினோவாவை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசில் சிக்கியுள்ள நபர், ஒகினவாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி அல்பிரட் மேகிள்பைக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதரின் முகத்தில் கத்துக்குத்து சம்பவம் நடைபெற்றதையடுத்து, அனைத்து நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply