இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு நாளாந்தம் 10,000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணைக் குழுவுக்கு இலங்கை குறித்து நாளாந்தம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்து வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான ஆர்வலர்களையும் ஊடகவியலாளர்களையும் கொண்ட ஒரு குழுவினர் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக் குழுவின் பத்தாவது மகாநாட்டில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளையைச் சந்தித்த போது இந்தத் தகவலை தம்மிடம் வெளியிட்டதாக இவர்கள் இன்று தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணைக் குழுவில் முக்கியமாகப் பேசப்படும் ஒரு நாடாக இப்போது இலங்கை விளங்குவதாகவும் அவர்; தெரிவித்தனர்.
மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளின் முக்கிய ஆர்வலரான திருமதி நிமல்கா பெர்ணான்டோ, சுதந்திர ஊடகவியலாளரான ரவி சந்திரலால் உட்பட்ட குழுவினரே தற்போது ஜெனீவாவில் தங்கியுள்ளனர். இவர்கள் இலங்கையில் மனித உரிமை நிலைவரம், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியுள்ளனர்.
தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் லண்டன் பொறுப்பாளர் அர்ச்சுனன் எதிர்வீரசிங்கமும் தம்முடன் இணைந்துள்ளதாகவும் இவர்கள் கூறினர்.
இதேவேளை, இந்தக் குழுவினர் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளையைச் சந்தித்து இலங்கை நிலைவரம் தொடர்பாக எடுத்துக் கூறினர். இலங்கையில் ஊடகவியலாளர்களின் இன்றைய நிலை தொடர்பாக அவர் தம்மிடம் கவலையை வெளியிட்டதாகவும் தெரிவித்தனர்.
இலங்கைக்கு வருமாறு தாம்; விடுத்த வேண்டுகோளையும் அவர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply