அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் பிரேஸர் மரணம்
அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மல்கொம் பிரேஸர் தனது 84 ஆவது வயதில் மரணமாகியுள்ளார்.1975 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய பிரதமராக பதவி வகித்த அவர், குறுகிய காலம் உடல் நலமின்மையால் பாதிக்கப்பட்ட நிலையில் மரணமாகியுள்ளார். பிரதமர் கோக் வித்லம் எதுவித முன்னறிவிப்புமின்றி பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, பெரும் சர்ச்சைக்கு மத்தியில் அவர் பிரதமராக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் பதவியிலிருந்த கால கட்டத்தில் அவுஸ்திரேலிய பூர்வீககுடிகள் மற்றும் அகதிகளது உரிமைகள் தொடர்பில் செயலாற்றியிருந்தார்.
அவர் குடியேற்றவாசிகளுக்கு அனுகூலமளிக்கக் கூடிய வகையில் பல மொழிகளிலான விசேட ஒளிபரப்புச் சேவையை ஆரம்பித்து வைத்திருந்தார்.
உலகில் எங்கு பிறந்திருந்தாலும் குடியேற்ற சமூகங்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்வதற்கான உரிமையை வழங்குவதற்கான பிரேஸரின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டு வதாக மேற்படி ஒளிபரப்புச் சேவை அமைந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply