திருகோணமலையில் 3 கோடி ரூபாய்கள் கப்பம் கோரி கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு
கடந்த புதன்கிழமை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தரம் ஒன்றில் கல்வி பயிலும் 6 வயதான யூட் றெஜி வர்சா என்ற மாணவி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். திருகோணமலை புதிய சோனகத் தெருவில் வடிகானுக்குள் உரப்பை ஒன்றில் போடப்பட்ட நிலையில் சடலம் வெள்ளிக்கிழமை 13.03.2009 கண்டு கொள்ளப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஸ்தலத்திற்கு வந்த காவற்துறையினர் சடலத்தை மீட்டெடுத்தனர்.
திருகோணமலை நீதவான் எம்.மனாப் ஸ்தலத்திற்கு விசாரணைகளை மேற்கொண்டு மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
திருகோமணலை மேல் நீதிமன்ற நீதிபர் எம்.இளஞ்செழியனும் ஸ்தலத்திற்கு வந்து சடலத்தைப் பார்வையிட்டார்.
3 கோடி ரூபாய்கள் கப்பம் கோரி குழந்தையின் தாயாருக்கு கடத்தல்கார்கள் மிரட்டல் தெரிவித்தனர். காவற்துறையிடம் சென்றால் குழந்தை கொல்லப்படுவாள் என எச்சரிக்கப்பட்டதுடன், தந்தையின் வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களையும் கேட்டுள்ளனர்.
விடயத்தை அறிந்த காவற்துறையினர் ரகசியமாக தேடுதலில் ஈடுபட்டனர்.
இதே நேரம் வெள்ளிக்கிழமை காலை புனித மரியாள் கல்லூரி மாணவிகள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அங்கு வந்த வலயக் கல்வி பணிப்பாளர் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நீங்கள் அடையாளத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் வகுப்புக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க காலை 10.30 மணியளவில் மாணவிகள் வகுப்புக்குத் திரும்பினர்.
கடத்தப்பட்ட பெண்குழந்தை கண்கள், வாய், கைகள் கால்கள் என்பன சலோட் டேப்பினால் ஒட்டப்பட்ட நிலையில் உரப்பையினுள் போடப்பட்டு இருந்தார்.
கொல்லப்பட்டவரின் தந்தை டோ கட்டார் என்னும் இடத்தில் சாரதியாகப் பணியாற்றுகின்றார்.
தாயார் திருமதி யூட் ரெஜி புஸ்பராணி காவற்துறையினருக்கும் நீதவானுக்கும் வாக்குமூலம் அளித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply