ஜனாதிபதி செயலகத்தில் சுகபோகங்களை அனுபவித்த 1,011 ஊழியர்களுக்கு கல்தா
கடந்த அரசால் முறையற்ற வகையில் சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்களை வழங்கி ஜனாதிபதி செயலகத்தில் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்த 1,011 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடமையிலிருந்து நீக்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின காலத்தில் இவ்வாறு முறையற்ற அரசியல் நியமனங்கள் வழங்கப்பட்டதால், செயலகத்தின் ஊழியர் எண்ணிக்கை 1,565 ஆக அதிகரித்து மேலதிகமாக ஊழியர்கள் இருந்ததாக செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக இந்த அரசியல் நியமனங்கள் வழங்கப்பட்டவர்களுக்கு சம்பளம், எரிபொருள், வாகனம், தொலைபேசி ஆகிய பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்ததால் ஜனாதிபதி செயலகத்தின் செலவு வரைமுறையற்று அதிகரித்திருந்தது. தற்போதைய ஜனாதிபதி இந்த ஊழியர் எண்ணிக்கையை 554 வரையில் குறைத்துள்ளார்.
இதனால் ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply