நீதியின் பெயரால் நாடுகள் செய்யும் படுகொலையே மரணதண்டனை
நீதியின் பெயரால் நாடுகள் செய்யும் படுகொலையே மரணதண்டனை என போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மரண தண்டனைக்கு எதிரான சர்வதேசக் குழு’ அமைப்புக்கு அவர் வெள்ளிக்கிழமை அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மரண தண்டனையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஒரு மனிதனைக் கொல்ல மற்றொரு மனிதனுக்கு ஒருபோதும் உரிமை கிடையாது. குற்றம் எவ்வளவு கொடியது என்றாலும், அதற்காக மரண தண்டனை விதிப்பது தற்காலத்தில் ஏற்புடையது அல்ல என தெரிவித்தார். மரண தண்டனை என்பது தோல்வியின் பிரதிபலிப்பே ஆகும். அது, நீதியின் பெயரைச் சொல்லி நாடுகள் செய்யும் படுகொலையே எனவும் தனது கடிதத்தில் போப்பாண்டவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply