உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை: சர்வதேச விசாரணை வேண்டும்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகளை முறையாக முன்னெடுக்கவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று காலை முதல் மட்டக்களப்பு நகரில் உண்ணாவிரதத்தில்  ஈடுபட்டுள்ளனர்.மட்டக்களப்பு மணிக்கூட்டுக்கோபுரத்தின் முன்னால் அதிகமான பெண்கள் காணாமல் போனோரின் உறவினர்களின் புகைப்படங்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.உண்ணாவிரதம் இடம்பெற்ற பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கான மகஜரை மாவட்ட லயன்ஸ் கழக தலைவர் கே.செல்வேந்திரன் கையளித்தார்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் காந்தி சேவா சங்க செயலாளர் எஸ்.கதிர் பாரதிதாசன் உட்பட பிரமுகர்கள் பலரும் சமுகமளித்திருந்தனர்.
உள்ளக விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை. சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்புவதாக செல்வேந்திரன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply