அமெரிக்க அதிபர் பதவி தேர்தலுக்கு தயார்: டெட் க்ரூஸ்

2016-ல் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதுக்காக தான் தயாராகி வருவதாக செனட் சபை உறுப்பினர் டெட் க்ரூஸ் (44) தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினரான இவர், மக்களின் ஆதரவை கோரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “அதிபர் தேர்தலுக்கான ஓட்டத்தில் இருக்கிறேன். உங்களது ஆதரவு எனக்கு தேவை.சக்தி வாய்ந்த அமெரிக்காவை மீண்டும் உருவாக்க பழமைவாதத்தை தைரியத்துடன் எதிர்க்கக் கூடிய புதிய தலைமுறை உருவாகி கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் பதவிக்கான போட்டியில் குடியரசுக் கட்சியிலிருந்து பலர் போட்டியிட இந்த முறை விருப்பம் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் ஃப்லோரிடா ஆளுநர் ஜெப் புஷ், விஸ்கின்சன் ஆளுநர் ஸ்காட் வாக்கர், செனட் உறுப்பினர்கள் கென்டுக்ஸி ராண்ட் பால், மார்கோ ருபியோ ஆகியோர் அதிபர் பதவிக்காக போட்டியிடும் ஆர்வத்தை கடந்த வாரம் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply