100 அமெரிக்கா ராணுவ வீரர்களை கொல்லப்போவதாக ஐஎஸ் மிரட்டல்

ஐ.எஸ் அமைப்பினர், தங்கள் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 100 அமெரிக்க ராணுவ வீரர்களின் புகைப்படத்துடன் கூடிய பட்டியலை, இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அவர்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு, தங்கள் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் அமெரிக்க ராணுவம், விமானப் படை, கப்பல் படையை சேர்ந்த முக்கிய வீரர்களின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இது, அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், அமெரிக்காவின் ராணுவ மற்றும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ‘ஹேக்’ செய்து பெறப்பட்டவை என, ஐ.எஸ் பயங்கரவாதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. பட்டியலில் இடம் பெற்றுள்ள ராணுவ வீரர்கள் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களிலிருந்து பெறப்பட்டவை என, அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply