தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்: வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு. இந்திய பிரதமர் இலங்கை சென்று வந்த பிறகும் இதற்கு தீர்வு கிட்டப்படும் என்று எதிர்பார்த்ததற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் தமிழத்தை சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

மீனவர்கள் வாழ்வாதாரம் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதை மத்திய அரசுக்கு, தமிழக அரசு எடுத்துரைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே 2 முறை மீனவ பிரதிநிதிகளோடு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 3 ஆவது முறையாக நடக்க இருந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

எனவே இன்று நடைபெறும் மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுவதற்கு ஏதுவாக, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும், அவர்களது படகுகளையும் உடனடியாக இன்றைக்குள் விடுவிக்க வேண்டும்.

மீனவ பிரதிநிதிகளுக்கிடையே நடக்கின்ற பேச்சுவார்த்தையும் நல்ல முறையில் நடந்து அனைத்து மீனவர்கள் வாழ்விலும் ஒளி தீபம் ஏற்றிட வேண்டும்.

தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் இலங்கை அரசால் பிரச்சனைகள் இன்றி தொடர ஒரு நிரந்தர, சுமூக, நல்ல முடிவுகள் எட்டப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply