ஹாங்காங்கில் தாய்–தந்தையை கொன்று சமைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ஹாங்காங்கை சேர்ந்தவர் ஹென்றி சாயு (31). இவர் தனது தாய் கியூ யுயெட்–யீ (62), தந்தை சாயு விங் – கி (65) ஆகியோரை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். முதலில் அவர்கள் சீனா சென்று இருப்பதாகவும், அங்கு அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், அந்த தகவல் நண்பனின் செல்போன் மூலம் தெரியவந்ததாகவும் கூறினார். இவரது வாக்குமூலத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்தனர். அதை தொடர்ந்து அவரது தாய் மற்றும் தந்தையின் தலைகள் வீட்டில் 2 பிரிட்ஜ்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.மற்ற உடல் பகுதிகளில் சில குப்பை தொட்டியில் வீசப்பட்டது. பெரும்பாலான உடற்பகுதிகளை அரிசியுடன் சேர்த்து சமைத்து ‘லஞ்ச் பாக்ஸ்’களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் கடந்த 2013–ம் ஆண்டு நடந்தது.
விசாரணையில், இந்த இரட்டை கொலைகளை ஹென்றி சாயு செய்ததை ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து இவரும், நண்பரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு ஹென்றி சாயுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அது தவிர மேலும் 9 ஆண்டுகள் 4 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தது. அந்த வழக்கில் அவரது நண்பர் குற்றமற்றவர் என கூறி விடுதலை செய்யப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply